அதிபரின் படகு வெடித்த சம்பவம்: மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

By ஏஎஃப்பி

மாலத்தீவு அதிபரின் படகு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் மூசா அலி ஜலீல் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28-ம் தேதி மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் பயணம் செய்த விரைவுப் படகின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதில் அப்துல்லா யாமீன் காயமின்றி தப்பினார். எனினும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர்.

மாலத்தீவில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உள்ள நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், “இது அதிபரை கொலை செய்யும் முயற்சியாக இருக்க லாம். பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம்” என்று அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் கூறினார்.

இந்த சம்பவத்தில், படகை எடுத்து வந்த பாதுகாப்பு படை யினர் இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். எனினும் படகு வெடித்தற்கான காரணம் இதுவரை அறிவிக்கப் படவில்லை.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் மூசா அலி ஜலீலை, அதிபர் பதவி நீக்கம் செய்துள் ளார். வேறு விளக்கம் எதையும் அவர் தரவில்லை. புதிய பாதுகாப்பு அமைச்சரையும் அதிபர் இதுவரை அறிவிக்க வில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

46 mins ago

உலகம்

22 hours ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்