புதின் ஆரோக்கியமாக இருக்கிறார்: ரஷ்யா அரசு தரப்பில் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதினின் உடல் நலம் குறித்து வெளியான தகவலை ரஷ்ய அரசு மறுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் பார்க்கின்சன் ( மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் புதின் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புதின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார் என்று பிரிட்டன் ஊடகங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் இந்தத் தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ புதின் உடல் நிலை சரியாக உள்ளது. அவர் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அதிபராக 2036 -ம் ஆண்டு வரை புதின் பதவி வகிப்பதற்கு கடந்த ஜூலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036 -ம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 2036 -ம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்