வங்கதேசத்தில் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 5,923 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கதேச சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 5,923 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,07,684 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்தும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago