இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பதற்கான உரிமம் பெற இந்திய அதிகாரிக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த அமெரிக்க நிறுவனத்திற்கு அமெரிக்கா ரூ.15 கோடி அபராதம் விதித்தது.
அமெரிக்காவின் சிகாகோவில் செயல்படும் நிறுவனம் பீம் சண்ட்ரி இங்க் என்ற நிறுவனமாகும், இது மதுபானங்களை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் தங்கள் மதுபானங்களை விற்க இந்த நிறுவனம் உரிமம் பெறுவதற்காக பத்து லட்சம் ரூபாய்களுக்கும் அதிகமாக இந்திய அதிகரிக்கு லஞ்சமாக அளித்துள்ளது.
மேலும் இந்தியாவில் வியாபாரம் செய்து பல அதிகாரிகளுக்கும் லஞ்சப்பணங்களை அள்ளி வீசியுள்ளது. அமெரிக்காவில் இவ்வாறு செய்வது குற்றம்.
எனவே இது தொடர்பாக நீதித்துறையிடம் அங்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ரூ.10 லட்சம் லஞ்சம் அளித்ததையும் மேலும் பல அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணத்தை பொருளையும் அள்ளி வீசியதை பீம் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
இதனையடுத்து அங்குள்ள கோர்ட் அமெரிக்க நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்தது. இதைச் செலுத்த அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது.
ஆனால் யார் அந்த அதிகாரி என்பதை நீதித்துறை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago