பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு?

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாகி வருவதால், மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய செயல்பாட்டு மையம் தரப்பில், “தற்போதைய நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மீண்டும் சேவைகள் முடக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் திட்டக் குழு அமைச்சர் ஆசாத் உமர் கூறும்போது, “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தானில் கரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாம் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தானில் கரோனா தொற்றிலிருந்து 3,06,640 பேர் மீண்டுள்ளனர். இதனால் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 95.1% ஆக உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்