மனித வரலாற்றில் கடந்த 4,500 ஆண்டுகளில் கழிவறை வடிவமைப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியையும், வித்தியாசங்களையும் சேகரித்து வைத்திருக்கிற டெல்லி அருங்காட்சியகத்தை உலகின் 10 விசித்திரமான அருங்காட்சியகங்களில் ஒன்றாக பிரபல 'டைம்' இதழ் தேர்வு செய்துள்ளது. இது அந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லியில் உள்ளது சுலப் சர்வதேச கழிவறை அருங்காட்சியகம். சுகாதாரம் குறித்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு 'சுலப்'. இது மனித இனம் தோன்றிய காலம்தொட்டு இன்று வரை கழிவறை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சாதாரண மண் பாண்டம் முதல் அலங்கரிக்கப்பட்ட விக்டோரிய அரியணை வடிவிலான கழிவறை வரை பலதும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. புத்தக அலமாரி வடிவில் இருக்கும் கழிவறையைக் கூட அங்கு காண முடியும்.
உலகம் முழுவதும் மே 18-ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அத்தினத்தை முன்னிட்டு பிரபல 'டைம்' இதழ், உலகம் முழுவதும் உள்ள விசித்திர மான 10 அருங்காட்சியகங்களைத் தேர்வு செய்துள்ளது.
அந்த இதழின் படி, டெல்லி அருங்காட்சி யகத்தின் சிறப்பம்சமாக இருப்பது 14-ம் லூயிஸ் அரசனுடைய அரியணையின் வடிவத்தில் உள்ள கழிவறையாகும். இந்தக் கழிவறையைப் பயன்படுத்தியவாறே அந்த அரசன் வழக்கு விசாரணைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
"உலகிலேயே இதுபோன்ற அருங்காட்சியகத்தை வேறு எங்கும் காண முடியாது. இந்தியாவில் சுகாதாரம் என்பது பெரும் சவாலாக விளங்கும் விஷயம். இந்த அருங்காட்சியகத்தின் மூலம், சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், அதற்காகக் கடந்த காலங்களில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அரசுக்கு எடுத்துச் சொல்கிறோம்" என்கிறார் இந்த அருங்காட்சியகத்தின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்.
முக்கிய செய்திகள்
உலகம்
26 mins ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago