இந்த ஆண்டு இறுதியில் பிலிப்பைன்ஸுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்: ரஷ்யா

By செய்திப்பிரிவு

தொடர்ந்து நடைபெறும் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மணிலாவுக்கான் ரஷ்ய தூதர் இகோர் கோவாவ் கூறும்போது, “ நாங்கள் நவம்பர் மாதம் தடுப்பு மருந்து தொடர்பாக இந்த பரிசோதனைகளை நடத்த உள்ளோம். நாங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தது ரஷ்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்