அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்: ட்ரம்ப் விமர்சனம்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளர் ஜோ பிடன் என்று அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்ப்பில் பல்வேறு மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்று பேசியபோது இதனை தெரிவித்தார்.

அதில் ட்ரம்ப் பேசியதாவது, “ அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக நான் போட்டியிட்டுள்ளேன். இதனால் எனக்கு அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. ஒருவேளை இதுபோன்ற நபருடன் தோற்பதை நீங்கள் நினைத்து பாருங்கள்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டை சரியாக வழி நடத்த மாட்டார்”. என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்குவதற்கு 21 நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பரவலை சரியாக கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறவிட்டதாக ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்று கொள்வதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்