ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் விரைவில் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
உட்கட்சிக்குள் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவு வாக்குகள் சரிந்ததை அடுத்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் ஆட்சியில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சூழலில் அதிருப்தி நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டோனி அபாட் மீது அவரது கட்சியைச் சேர்ந்த மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதனை அடுத்து உட்கட்சியில் இருவருக்கும் இருக்கும் ஆதரவு குறித்த வாக்கெடுப்பு நேற்று (திங்கள்கிழமை) இரவு நடந்தது.
இதில், டோனி அபாட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும் டர்ன்புல்லுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன. இதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அபாட் தெரிவித்தார்.
டோனி அபாட் ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த 2013லிருந்து பதவி வகித்தார். இவரைத் தொடர்ந்து, விரைவில் மால்கம் டர்ன்புல், நாட்டின் ஆஸ்திரேலியாவின் 29வது பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
52 mins ago
உலகம்
11 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago