பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பாரீஸில் மோண்ட்மார்ட்டர் ஹில் பகுதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீ பரவியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு முன்பாகவே தீ 3, 4-வது தளம் முழுவதும் வேகமாக பரவிட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் 4 பேரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் அதிக அளவில் தீக்காயம் அடைந்திருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். தீ அணைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் இருவர் சிறுவர்கள்.
இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வில்லை. பிரான்ஸ் சமீபகால மாக தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக மாறிவிட்டது. எனவே இதில் தீவிரவாத சதி ஏதும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாரீஸ் நகர மேயர் ஆனி ஹிடால்கோ, உள்துறை அமைச்சர் பெர்னார்ட் சாஸ்னியூவ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago