ஆன்லைனில் விவாதம் நடந்தால் பங்கேற்க மாட்டேன்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் அடுத்த விவாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் நான் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடான அடுத்த விவாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் நான் பங்கேற்க மாட்டேன். நான் ஆன்லைன் வழி விவாதத்தில் பங்கேற்று எனது நேரத்தை வீணடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த 1-ம் தேதி ட்ரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால், ட்ரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ட்ரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

முன்னதாக, அவர் மருத்துவமனையில் இருந்து புறப்படுவதற்கு முன் ட்விட்டரில் “நான் மிகவும் நலமாக இருக்கிறேன். விரைவில் பிரச்சாரப் பாதைக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்