ஜெர்மனியில் 4.5 லட்சம் அகதிகள் தஞ்சம்

By ஏஎஃப்பி

இந்த ஆண்டில் இதுவரை 4.5 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் துணை பிரதமர் சிக்மர் கேபிரியேல் கூறியதாவது: கடந்த ஜனவரி முதல் இதுவரை ஜெர்மனிக்கு 4.5 லட்சம் அகதிகள் வந்துள்ளனர். இதில் ஆகஸ்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரும் செப்டம்பரில் முதல் எட்டு நாட்களில் மட்டும் 37 ஆயிரம் பேரும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இதில் ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டுள்ளது. பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கணிசமான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளன.

ஆனால் ஹங்கேரி அரசு அகதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாகவே ஜெர்மனிக்கு செல்ல முடியும். ஆனால் அகதிகளை தடுக்கும் வகையில் ஹங்கேரி அரசு தனது எல்லையில் இரும்பு வேலிகளை அமைத்து வருகிறது. மேலும் எல்லையில் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது.

ஐ.நா.விடம் முறையீடு

லிபியா நாட்டில் ஏராளமான கடத்தல் கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பல்கள் மூலமாகவே அகதிகள் கடல்மார்க்கமாக ஐரோப்பாவுக்குள் நுழைகின்றனர். எனவே கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்த கடலில் ரோந்து கப்பல்கள் மூலம் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் சார்பில் ஐ.நா. சபையிடம் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே அகதிகள் பிரச்சினை தொடர்பாக வரும் 30-ம் தேதி ஐ.நா. சபையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெறுகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்