நான் சிறப்பாக இருக்கிறேன் என்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். எனினும் ட்ரம்ப் கரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டாரா என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.
இந்த நிலையில் தான் நலமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் சிறப்பாக இருக்கிறேன். வியாழக்கிழமை மாலை மியாமியில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். விவாதம் சிறப்பாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் வெள்ளை மாளிகையில் காத்திருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி ட்ரம்ப் கையசைத்தார். அப்போது அவர் முகக் கவசத்தைக் கழற்றி இருந்தது விமர்சனத்துக்குள்ளானது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago