சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசுத் தரப்பில், “ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு ட்ரம்ப் மட்டுமே காரணமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர்த் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.
அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், இவ்விரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், ஈரானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago