அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபர் ட்ரம்ப்புக்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர்ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ராணுவ மருத்துவ மையத்துக்குச் சென்றபின் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரம் கரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் மைக் பென்ஸ்.
முக்கிய செய்திகள்
உலகம்
51 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago