கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள், ''ட்ரம்ப் தொடர்ந்து வால்டர் ரீட் மருத்துவமனையில் மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் ட்ரம்ப்பைக் கவனித்து வரும் மருத்துவர்கள், அவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார். நாளை கூட டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால்,ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ராணுவ மருத்துவ மையத்துக்குச் சென்றபின் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அது நாளையாகக் கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
34 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago