அமெரிக்காவில் சுமார் 42 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 6.5 சதவீதம் இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின், தேவேஷ் கபூர் மற்றும் ஜஷான் பஜ்வாட் ஆகியோரால் நடத்தப்பட்ட "இந்திய அமெரிக்க மக்கள்தொகையில் வறுமை பற்றிய ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் வங்காளிகள் மற்றும் பஞ்சாபியர்கள் அதிகம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாடுவதாக தேவேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
» ரூ.660 கோடி மதிப்பிலான ராணுவ விமான உதிரி பாகங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உழைப்புச் சக்தியில் இல்லை, ஐந்தில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெறாதவர்கள்.
இண்டியாஸ்போரா நிறுவனர் ரங்கசாமி இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த அறிக்கையின் மூலம் அமெரிக்காவில் வாழும் வறுமைக்குக் கோட்டிற்குக் கீழ் உள்ள இந்தியர்கள் பற்றிய கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்’ என்றார்.
ஆனாலும் இந்தியர்களின் வறுமை நிலை அமெரிக்காவில் வாழும் கருப்பரினத்தவர் மற்றும் ஸ்பானிய அமெரிக்கர்களை ஒப்பிடும்போது பரவாயில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago