உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தது தனிமைப்படுத்திக்கொண்ட ட்ரம்ப் அவரின் மனைவியும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் வேளையில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக 2-வது முறையாகப் போட்டியிடும் அதிபர் ட்ரம்ப் கரோனாவில்பாதிக்கப்பட்டு இருப்பது அவரின் வெற்றியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பல தலைவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரிசையில் 74 வயது ட்ரம்பும் சேர்ந்துள்ளார்.
» 6 மாதங்களுக்குப்பின்: சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா
» நான் ஜோ பிடனை போன்று மாஸ்க் அணிவதில்லை: வைரலாகும் ட்ரம்ப்பின் வீடியோ
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்
பிரிட்டனில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய ஏப்ரல் மே மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் கரோனாவில் பாதிக்கப்பட்டார். உலகளவில் மிகப்பெரிய தலைவர் கரோனாவில் பாதிக்கப்பட்டதும் பிரிட்டனில்தான்.
வீட்டில் தனிமையில் சில நாட்கள் இருந்த போரிஸ் ஜான்ஸன் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கைமுறையில் ஆக்ஸிஜன் சப்ளை வழங்கப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னர் ஜான்ஸன் குணமடைந்தார்.
பிரேசில் அதிப்ர ஜேர் போல்ஸனாரோ
தான் மட்டுமல்ல, மக்களையும் முகக்கவசம் அணியாதீர்கள் என்று முரட்டுத்தனமாகப் பிரச்சாரம் செய்து வியக்கவைத்தவர் பிரேசில் அதிபர் போல்ஸனாரோ. மக்களை அதிகமாகக் கூட்டிவைத்து சமூக இடைவெளியின்றி பிரச்சாரம் செய்து மருத்துவர்களால் போல்ஸனாரோ விமர்சிக்கப்பட்டார்.
கரோனாவிலிருந்து காக்கும் என்று மருத்துவரீதியாக நிருபிக்கப்படாத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அதிகமாகப் புகழந்து அதை மக்களுக்கு போல்ஸனாரோ பரிந்துரை செய்தார். இறுதியில் போல்ஸனாரோவையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. ஜூலை மாதம் கரோனாவில் பாதிக்கப்பட்ட போல்ஸனாரோ தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து முகக்கவசம் அணியத் தொடங்கினார்.
ஹோண்டுராஸ் அதிபர்
ஹோண்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ், அவரின் மனைவியும் கடந்த ஜூன் மாதம் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அதிபருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரிகள் சிலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.
ஆனால் அதிபர் ஓர்லாண்டோவோ, எம்ஏஐஇசட் சிகிச்சையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதாவது, மைக்ரோடாக்கின், அசித்ரோமைசின், இன்வர்மெக்டின், ஜிங்க் ஆகிய மாத்திரைகளின் கலவையான MAIZ மாத்திரைகளை ஹோண்டுராஸ் அரசு மக்களுக்குப் பரிந்துரை செய்தது. இருப்பினும் பலன் அளிக்கவில்லை. அதிபர் ஓர்லாண்டோவும் 15 நாட்கள் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.
கவுதமாலா அதிபருக்கு கரோனா
கவுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டிக்கு கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், கரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டில் இருந்தவாறே அரசுப்பணிகளைக் கவனித்து சில நாட்களி்ல குணமடைந்தார்.
பொலிவியா அதிபர்
பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபர் ஜீன்னி அனிஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.
டோமினிக் குடியரசு அதிபர்
டோமினிக் குடியரசின் புதிய அதிபர் லூயிஸ் அபிநடர் கரோனா வைரஸால் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதிக்கப்பட்டார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த அதிபர் லூயிஸ் ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஈரான் தலைவர்கள்
மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நாடான ஈரானில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மூத்த துணை அதிபர் ஈஷாக் ஜஹாங்கிரி, துணை அதிபர் மசூமெக் எப்திகர், கேபினட் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago