அமெரிக்காவில் தங்கள் நிறுவனத்தைச் சேந்த 20,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ”அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 20,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த அமெரிக்க தொகையில் குறைவுத்தான். எங்களை போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள்
நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருந்தால் அதன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது நமக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
» தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் கரோனா பரிசோதனை
» கிராம சபை கூட்டங்கள் ரத்து; திட்டமிட்டப்படி மக்களை சந்திப்போம் : ஸ்டாலின் அறிவிப்பு
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago