வளர்ந்த நாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்பைப் சந்தித்துள்ளன: ஐ.நா.

By செய்திப்பிரிவு

வளர்ந்த நாடுகள் கரோனா தொற்று காரணமாக கடுமையான பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியா குத்தரேஸ் கூறும்போது, ''வளர்ந்த நாடுகள், பல மாதங்களாக நிலவும் கரோனா தொற்று காரணமாக கடுமையான பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனைச் சரிசெய்ய அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை இரட்டை இலக்கங்களாக உயர்த்த உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் இதனைச் செய்ய வளங்களைத் திரட்டுவதே பிரச்சினையாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்