ட்ரம்ப்தான் அமெரிக்கக் கருப்பின மக்களைக் காக்கப் போகிறாரா என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பிடன், அமெரிக்கக் கருப்பின மக்களின் நலனுக்காக ட்ரம்ப் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதில் ஜோ பிடன் பேசும்போது, “அமெரிக்கக் கருப்பின மக்களை ட்ரம்ப் காக்கப் போகிறாரா? அதிபராக அவர் கருப்பின மக்களுக்கு என்ன செய்துவிட்டார். ட்ரம்ப் எதுவும் செய்யவில்லை” என்று விமர்சித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. இனவாதத்துக்கு எதிராகவும், நிறவாதத்துக்கு எதிராகவும் உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கருப்பின மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சரியாகக் கையாளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் கருப்பின மக்களின் ஆதரவு ட்ரம்ப்புக்குக் குறைவாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago