உலகிலேயே முதன்முதலாக10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிச் சாதனை புரிந்த  ‘லெஜண்ட்’ ஆங் ரிடா ஷெர்பா காலமானார்   

By செய்திப்பிரிவு

நேபாள நாட்டைச் சேர்ந்த, ஆங் ரிடா ஷெர்பா உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக10 முறை ஏறிச் சாதனை புரிந்த சாதனையாளர் ஆவார். இவர் நீண்ட நாளைய உடல்நலக்குறைவினால் திங்களன்று காலமானார். இவருக்கு வயது 72.

இவரது இழப்பு ஷெர்பாக்களுக்கும் எவரெஸ்ட் சிகரத்தை அலட்சியமாக ஏறிச்சாதனை படைக்கும் மலேயேறிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29,035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை 1983 முதல் 1996 வரை 10 முறை ஏறிச்சாதனை புரிந்தார் ஆங் ரிடா. பாட்டிலில் அடைகப்பட்ட ஆக்சிஜன் இல்லாமலேயே எவரெஸ்ட்டை ஏறும் திறன் கொண்டவர்.

நீண்ட காலமாக இவர் மூளை மற்றும் லிவர் நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டூவில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.

இவரது மலையேறும் திறனுக்காக இவருக்கு இன்னொரு செல்லப்பெயர் உண்டு, ‘பனிச்சிறுத்தை’ என்பதுதான் அந்த புகழ்ப்பெயர்.

காத்மாண்டூவில் உள்ள புனித இடமான ஷெர்பா கோம்பாவில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பிறகு வேறு சில மலையேறு வீரர்களும் ஆங் ரிடாவின் சாதனையை முறியடித்துள்ளனர், ஒருவர் 24 முறை எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார், ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலில் 10 முறை எவரெஸ்ட்டைத் தொட்ட வீரர் ஆங் ரிடா ஷெர்பா இப்போது நம்மிடையே இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்