கண்ணாடி அணிந்தால் கரோனா பரவும் வாய்ப்பு குறையும் என்று சீனாவில் இயங்கும் மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை சீனாவின் சுஐஜோ சியங்டு என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
“நாங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரம் கண்ணாடி அணிந்த சில தன்னார்வலர்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் முடிவில் கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணாடி அணியாதவர்களை விட கரோனா பாதிப்புக்கு உள்ளாவது குறைவாக உள்ளது. கண்ணாடி அணிந்தால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்று சுஐஜோ சியங்டு மருத்துவமனை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், சுவாசப் பாதைகள் மட்டுமல்லாது கண்களும் கரோனா வைரஸ் பரவுவதற்கு வழித்தடமாக இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago