பிரிட்டனில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மீண்டும் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால், தேவைப்பட்டால் அதனை அமல்படுத்தத் தயாராக இருக்கிறோம்.
வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 8 நாளைக்கும் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago