அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என்று நினைப்பதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அரசின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அலி ரபீ கூறும்போது, “அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என்று நினைக்கிறோம். அவ்வாறு அவர்கள் செய்தால் ஈரானின் தீர்க்கமான பதிலடியைக் காண்பார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ''பத்திரிகைகள் அளித்த தகவலின்படி ஈரான், அமெரிக்கத் தூதரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு தற்போது ஈரான் பதில் அளித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், இவ்விரு நாடுகள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago