சீனாவில் மியான்மர் எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களால் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு எல்லை மூடல் நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “மியான்மர் எல்லைப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரோனா தொற்று எண்ணிக்கையும் அப்பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்று காரணமாக ருய்லி நகரம் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்நகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனைகளைச் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுமானப் பணிகள், கடைகள், உணவு விடுதிகளில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது.
சீனாவில் 85,202 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு மட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப்பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொள்வதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து கூறி வருகிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago