இஸ்ரேல் - பஹ்ரைன் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

இஸ்ரேல் - பஹ்ரைன் நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்க தருணம். நமது சிறந்த நண்பர்கள் இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். 30 நாட்களில் இஸ்ரேலுடன் சமாதானம் செய்த இரண்டாவது அரபு நாடு பஹ்ரைன்” என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை முறைப்படுத்த பஹ்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அமீரகம் இஸ்ரேலுடன் மேற்கொண்ட ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளன.

இந்த நிலையில் இந்த ஒப்பந்த்தை பெஞ்சமின் நெதன்யாகு, பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “ இஸ்ரேலின் குடிமக்களுக்கு நான் ஒரு செய்தியை கூற இருக்கிறேன். நாம் மற்றுமொறு அரபு நாட்டுடன் ஒப்புந்தம் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.

இப்போது மேலும் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்