கரோனா வைரஸின் பேரழிவுத் தன்மையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார் என்று சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கூறும்போது, ''கரோனா வைரஸின் பேரழிவுத் தன்மையை ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார். ஆனால், உண்மைகளை மறைத்து கரோனா வைரஸின் அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
கரோனா வைரஸுக்கு எதிராக முழு நாட்டையும் தயார்படுத்தத் தவறிவிட்டார். கரோனாவுக்கு எதிராக நாட்டைத் தயார் செய்திருந்தால் பெரும்பாலான துன்பங்கள் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க அதிபர் உண்மையைக் கூற மறுத்துவிட்டார். ட்ரம்ப்பின் தவறுகளால் வரலாற்று தேசிய சோகத்தை நாம் சந்தித்துவிட்டோம்.
இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் கரோனா வைரஸைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க மறுத்து வருகிறார். அதிபர் ட்ரம்ப்பின் வார்த்தைகள் பேரழிவை உச்சரிக்கின்றன” என்று தெரிவித்தார்.
கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி விமர்சித்து வருகிறது.
குடியரசுக் கட்சி சார்பாக மீண்டும் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago