பாகிஸ்தானின் ஜியாரத் கார் மலைப்பகுதியில் உள்ள பிரபல சலவைக்கல் சுரங்கத்தின் 6 யூனிட்கள் இடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டதில் 22 பேர் பலியாகியுள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பெஷாவருக்கு 85 கிமீ தொலைவில் உள்ள இந்தச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பாறைகள் தொழிலாளர்கள் மேல் விழுந்தன. திங்கள் இரவு நிகழ்ந்த கொடூர விபத்தில் 12 சுரங்கத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கிப் பலியாகினர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்ததில் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர், இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள், ஒரு சிலர் அங்கு மலையடிவாரத்தில் குழுமியிருந்தவர்கள்.
இடு தொடர்பாக மாவட்ட போலீஸ் அதிகாரி, தாரிக் ஹபீப் கூறும்போது, இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
» பங்கேற்றவருக்கு ‘மோசமான பக்க விளைவு’ எதிரொலி: ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தி வைப்பு
இரவு நேரமானதால் மீட்புப் பணி முழு நிறைவடையவில்லை, செவ்வாய் காலையிலிருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்னிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
சுரங்கம் இடிந்து விழுந்த போது 45 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும், காயமடைந்தவர்களும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
2015-ல் இதே போன்று சலவைக்கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago