தாய்லாந்து பிரதமர் நீக்கம்: நீதிமன்றம் அதிரடி - 9 அமைச்சர்களின் பதவியும் பறிப்பு

By செய்திப்பிரிவு

தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2013 நவம்பர் முதல் அரசுக்கு எதிரான போராட் டங்களால் அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத் தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. உத்தரவை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக வர்த்தக அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் பய்சான் என்பவரை இடைக்கால பிரதமராக எஞ்சிய அமைச்சர்கள் தேர்வு செய்துள்ளனர்.

தாய்லாந்தின் தேசிய பாது காப்பு கவுன்சில் தலைவர் தாவில் ப்ளியன்ஸ்ரீ இவர் 2011-ல் எதிர்க்கட்சி ஆட்சியின்போது இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப்ளியன்ஸ்ரீ அண்மையில் வேறு பதவிக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரசியல் சாசன நீதிமன்றம், “உரிய நடைமுறை களை பின்பற்றாமல் அவசர கதியில் இந்த பதவி மாற்றம் நடந்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதனமாது. இதன் மூலம் பிரதமர் ஷினவத்ரா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே அவரும், இந்த முடிவில் தொடர் புடைய கேபினட் அமைச்சர்கள் 9 பேரும் பதவி விலகவேண்டும்” என்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை ஆஜரான பிரதமர் ஷினவத்ரா, “இந்த முடிவால் தனது கட்சி எந்த ஆதாயமும் அடையவில்லை” என்றார். ஆனால் இம்முடிவால் பிரதமரின் உறவினர் ஒருவர் பலன் அடைந்

துள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பிரதமரின் ஆலோசகர் நொபட்டன் பட்டமா கூறுகையில், “நீதிமன்ற தீர்ப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்டுப்பட்டவை என்று அரசியல் சாசனம் கூறுகிறது. எனவே இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் நாங்கள் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

இந்நிலையில் வர்த்தக அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் பய்சான் என்பவரை இடைக்கால பிரதமராக எஞ்சிய அமைச்சர்கள் தேர்வு செய்துள்ளனர். எனினும் ஷினவத்ராவின் கட்சிக்கு தாய்லாந்தின் கிராமப் புறங்களில் அதிக செல்வாக்குள்ள நிலையில் அவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று கூறப்படுகிறது. தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தலைநகர் பாங்காக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. நகரில் பல்வேறு பகுதிகளில் இப் போராட்டம் போக்குவரத்தை முடக்கின.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் ஷினவத்ரா மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர் களின் இடையூறால் பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போதைய நீதி மன்ற தீர்ப்பை அரசு எதிர்ப் பாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் நீதிமன்றங்கள் பாரபட்சமாக செயல்படு வதாகவும், அவை நகர்ப்புற மக்களுக்கு சாதகமாக இருப்ப தாகவும் ஷினவத்ராவின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந் நிலையில் தற்போதைய தீர்ப்பு தாய்லாந்தில் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுத் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்