ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட குறைந்தபட்ச கரோனா தொற்று இதுவாகும். ஆஸ்திரேலியாவில் தற்போதுள்ள ஊரடங்கு செப்டம்பர் 28 ஆம் தேதிவரை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து விக்டோரியா மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மெல்போர்னிலும் கரோனா தொற்று குறைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 26,322 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 762 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago