நாங்கள் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசி குறித்து விமர்சித்தவர்களுக்குப் பதிலளித்துவிட்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய செல்வ நிதி மையத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் தரப்பில், “சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் தடுப்பூசியின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் தடுப்பூசிக்கு எதிரான எதிர்மறையான விளம்பரத்தில் மும்முரமாக உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளித்தோம். தற்போது மேற்கத்திய நாடுகள் தயாரிக்கும் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்துக் கேள்வி கேட்க உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
» எளிதில் தூக்கி செல்லக்கூடிய கிருமி நாசினிக் கருவி: இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் நடவடிக்கை
ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அதற்கு ரஷ்யா பதிலளித்துள்ளது.
ரஷ்யாவில் 10,20,310 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,38,126 பேர் குணமடைந்துள்ளனர். 17,759 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago