இந்திய - சீன எல்லையில் மோசமான நிலைமை; உதவத் தயாராக இருக்கிறோம்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

இந்திய-சீன எல்லையில் மோசமான நிலைமை நீடிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இந்திய- சீன எல்லையில் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் இந்தியா மற்றும் சீனாவுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.

இந்த விவகாரத்தில் எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். நாங்கள் சீன - இந்திய எல்லைப் பிரச்சனை குறித்துப் பேசத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில், கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்