அகதிகள் படகு கவிழ்ந்து கிரீஸில் 5 வயது சிறுமி பலி: 13 பேர் மாயம்

By ராய்ட்டர்ஸ்

கிரீஸ் தீவான லெஸ்போஸில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 5 வயது சிறுமி பலியானதாகவும், 13 அகதிகள் மாயமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

துருக்கியிலிருந்து துன்பம் தரும் பயணத்துக்குப் பிறகு 40 அகதிகள் லெஸ்போஸ் தீவை அடைந்தனர். இவர்களது படகு எந்திரம் கோளாறு அடைந்ததால் கடலில் சுமார் 10 கிமீ நீந்தியே கடந்து லெஸ்போஸ் தீவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

அயல்நாட்டு உதவிக்குழுக்களால் கடலிலிருந்து மீட்கப்பட்ட 18 வயது மொகமது ரீஸா தெரிவிக்கும் போது, “கடலில் நாங்கள் இருந்த போது எந்த வித நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன்” என்றார்.

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கிழக்கு தீவுகளுக்கு நூறாயிரக் கணக்கான சிரியா நாட்டு அகதிகள் பல இன்னல்களுடன் கொந்தளிக்கும் கடலில் சிறிய, பாதுகாப்பற்ற படகுகளில் வந்துள்ளனர்.

ரீஸா, இவர் ஆப்கானிலிருந்து கிளம்பி, குடும்பத்தினரை ஈரானில் விட்டுவிட்டு வந்த போது ராய்ட்டர்ஸ் டிவிக்கு கூறும்போது, “எரிபொருளும் கடல்நீரும் கலந்து விட்டது, நடுக்கடலில் 7, 8 மணி நேரங்கள் தத்தளிதோம். உணவு, குடிநீர் எதுவும் இல்லை.

துருக்கி, கிரேக்க கடலோரக் காவல்படையினர் தவிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்தவித உதவியையும் செய்ய முன்வரவில்லை. அந்தக் கணத்தில் நாங்கள் எங்களை பயனற்றவர்களாக, உதவாக்கரைகளாக உணர்ந்தோம். நாங்கள் மனிதர்கள் அல்ல.

கடந்த ஞாயிறன்று ஃபர்மகோனிசி தீவில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் பலியான 34 பேர்களில் 15 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 2 நாட்களுக்குப் பிறகு மேலும் 22 பேர் மூழ்கி பலியாகினர், 200 பேர் மீட்கப்பட்டனர்.

மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு இந்த ஆண்டு புலம் பெயர்ந்த 4,30,000 பேர்களில் 309,000 பேர் கிரீஸ் வழியாகவே வந்துள்ளனர்.

ஜூலை, ஆகஸ்டில் மட்டும் 1,50,000 அகதிகள் கிரீஸுக்கு வந்துள்ளனர். லெஸ்போஸ் தீவில் படகுகளில் அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்