ஏமனின் ஹோடிடா துறைமுகத்தை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப் படை நேற்றிரவு நடத்திய வான்வழி தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியாகினர்.
ஏமனில் அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு போர் உச்சகட்டத்தை எட்டியபோது அங்கு பணியாற்றிய இந்தியர்களை மத்திய அரசு கப்பல், விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வந்தது. எனினும் இன்னமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஹோடிடா துறைமுகப் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் கடத்தல்காரர்கள் கச்சா எண்ணெயை கடத்திச் செல்வதாக சவுதி அரேபிய கூட்டுப் படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த துறைமுகப் பகுதியை குறிவைத்து சவுதி அரேபிய படைகள் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 20 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தகவலை உள்ளூர் மீனவர்கள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏமனில் உள்ள இந்திய தூதரகத்திடம் மத்திய அரசு விவரங்களைக் கோரியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago