துருக்கி படகு விபத்தில் உயிரிழந்த குழந்தை அய்லானுக்கு மொராக்கோ தலைநகர் ரபாத்தில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டுக்கு அகதியாகச் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து அப்துல்லாவின் மனைவி ரேஹன், குழந்தைகள் காலீப், அய்லான் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் 3 வயது குழந்தை அய்லானின் உடல் துருக்கியின் கோஸ் தீவின் போட்ரம் கடற்கரை யில் ஒதுங்கியது. கடற்கரை மணலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப்படம் உலகத்தை தலைகீழாக புரட்டி போட்டது. அந்த ஒரு புகைப் படத்தால் பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு ஜெர்மனி, ஆஸ்தி ரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் அளித்தன.
இந்நிலையில் மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாத் கடற்கரை யில் அய்லானுக்கு நேற்று முன்தினம் வித்தியாசமான முறை யில் அஞ்சலி செலுத் தப்பட்டது. குழந்தை அணிந்தி ருந்ததுபோல சிவப்பு நிற டி-சர்ட் அணிந்து சுமார் 100 பேர் கடற்கரை மணலில் உயிரற்ற சடலம் போன்று தலைகுப்புற படுத்திருந்தனர்.
இதேபோல பாலஸ்தீனத்தின் மேற்குகரை கடற்கரையில் சிறுவனின் மணல் சிற்பம் வடிவ மைக்கப்பட்டு அஞ்சலி செலுத் தப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago