நான்கு நாடுகளுடன் விமான சேவையை தொடங்கிய ரஷ்யா

By செய்திப்பிரிவு

எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுடனான சர்வதேச விமான சேவைகளை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) ரஷ்யா அரசு தரப்பில், ‘‘எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுடனான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. கைரோவுக்கு வாரத்திற்கு மூன்று விமானங்களும், துபாய்க்கு வாரத்துக்கு இரண்டு விமானங்களும், மாலத் தீவுக்கு வாரத்திற்கும் இரண்டு விமானங்களும் ரஷ்யாவுக்கு வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார். இந்த நிலையில் போதிய பாதுகாப்பு உபரகணங்களுடன் மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்