எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 12 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொலை

By ஏபி

ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் மெக்ஸி கோவை சேர்ந்த 12 சுற்றுலா பயணிகளை எகிப்து ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. மேலும் 10 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

எகிப்தின் மேற்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்தப் பிராந்தி யத்தில் அண்மைக்காலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பாலைவனப் பகுதிக்கு மெக்ஸி கோவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று வாகனங்களில் சுற்றுலா சென்றனர். அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகித்த எகிப்து ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 12 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்துக்கு மெக்ஸிகோ அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எகிப்து அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், சம்பவ பகுதி தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. தடை செய்யப் பட்ட பகுதியில் நுழைந்ததால்தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்