இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை ரிக்டர் 6.6 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதில் 39 பேர் காயம் அடைந்தனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணம், சொரோங் நகருக்கு 28 கி.மீ. வடக்கே கடற்பகுதியில் 24 கி.மீட்டருக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவிக்கிறது.
சொரோங் நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து அவற்றில் இருந்து வெளியேறினர். இந்நகரில் சுமார் 260 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதில் 39 பேர் காயம் அடைந்தனர். சேதமடைந்த வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.
நிலநடுக்க மையப் பகுதியில் இருந்து மேற்கே 315 கி.மீ. தொலை வில் உள்ள மனோக்வாரி நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இங்கும் மக்கள் பீதியடைந்து கட்டிடங்களில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டாலும் அருகில் உள்ள கடற்கரை பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago