கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ - போப் பிரான்சிஸ் சந்திப்பு

By ஏபி

கியூபா சென்ற போப் பிரான்சிஸ், அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது. காஸ்ட்ரோ உடல் நலன் குறித்து விசாரித்த போப், மனித உரிமை மீறல், உலக பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.

போப் பிரான்சிஸ் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 10 நாள் பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் கியூபா சென்றார். தலைநகர் ஹவானாவில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை (89) அவர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் போப், அமெரிக்கா, கியூபா இருநாடுகளும் நெருக்கமாகி வரும் இந்தச் சூழலில் சித்தாந்தத்தினால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கியூபா மக்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

ஏழைகளின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வரும் போப் பிரான்சிஸ், அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடைமுறைகளை விமர்சித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

51 mins ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்