ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 744 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் சுகாதாரத் துறை தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,744 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,61,493 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 65 பேர் பலியாக 16,488 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.
இதனால் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை உலக நாடுகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் மூன்றாம் கட்டப் பரிசோதனையாக அடுத்த வாரம் 40,000 பேருக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago