அடுத்த மாதம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ கரோனா வைரஸால் பள்ளியில் ஏற்படும் ஆபத்து குறைவு. குழந்தையின் வளர்ச்சிக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் இனியும் பள்ளியிலிருந்து விலகி இருப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். நம் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதும், அவர்களுடைய நண்பர்களுடன் இருப்பதும் மிக முக்கியம். பள்ளிக்கு திரும்புவதைவிட வேறு எதுவும் நம் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது” என்று தெரிவித்துள்ளார்.
கிளாக்ஸோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 60 மில்லியன் அளவுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாக பிரிட்டன் முன்னரே குற்றம் சாட்டியது.
கரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.
பிரிட்டனில் கரோனா வைரஸா 3,25,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,433 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago