கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை அடுத்த வாரம் 40,000 ஆயிரம் பேருக்குச் செலுத்தி சோதிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கரோனா வைரஸுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. அந்தத் தடுப்பு மருந்து உடலில் நிலையான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.
» ஐபிஎல் டி20 தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள்
இதனால் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை உலக நாடுகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் மூன்றாம் கட்டப் பரிசோதனையாக அடுத்த வாரம் 40,000 பேருக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 4,921 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் சுமார் 9,51,897 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16,310 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago