ஜோப் பிடனை அதிபராகத் தேர்வு செய்தால் அது உங்களது துர்க்கனவாகவே இருக்கும் : அதிபர் ட்ரம்ப் தாக்கு

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது உங்களது துர்க்கனவாக முடியும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதில் பென்சில்வேனியாவில் வாக்காளர்களர்கள் இடையே பேசும்போது குடியரசுத் தலைவர் ஜோ பிடனை கடுமையாக விமர்சித்தார்.

அதில் ட்ரம்ப் பேசியதாவது, “ ஜனநாயகக் கட்சியினர் தொழிலாளர்களை விற்றுவிட்டனர். அமெரிக்க அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது மோசமான கனவாக உங்களுக்கு இருக்கும்” என்று வாக்காளர்களை நோக்கி தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் நேற்று அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த விமர்சனத்தை ட்ரம்ப் வைத்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால் அவர் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் ஜோ பிடன் விமர்சித்திருந்தார்.

அமெரி்க்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்