நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மினசோட்டாவில் மக்களிடம் பேசும்போது, ”சில நாடுகள் கரோனாவை கட்டுப்படுத்திய பட்டியலில் இருந்தார்கள். ஆனால் இப்போது என்ன நடந்தது. நியூசிலாந்தை பாருங்கள். நியூசிலாந்து கரோனா வைரஸை எதிர் கொள்வதில் முன்னர் வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது கரோனாவின் பிடியில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப்பின் கருத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடென் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெசிந்தா கூறியதாவது, “ கரோனா பரவலை கவனித்துக் கொண்டிருக்கும் எவரேனினும் நியூசிலாந்தில் ஒரு நாளில் 9 பேருக்கு கரோனா ஏற்படுவதையும் அமெரிக்காவில் அதே ஒரு நாளில் பத்தாயிரம் பேருக்கு கரோனா ஏற்படுவதையும் ஒப்பிட மாட்டார்கள். வெளிப்படையாகவே இது தவறானது” என்று தெரிவித்தார்.
தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago