பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் அதிபர் சுகாதாரத் துறை அமைச்சகம், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,59,570 ஆக அதிகரித்துள்ளது. 600 பேர் பலியாகி உள்ளனர்.
பிரேசிலில் இதுவரை 1,08,536 பேர் பலியாகி உள்ளனர். 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பிரேசிலில் கரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது.
» மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: சவுகான் திட்டவட்டம்
» கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், மேகாலயா ஆளுநராக நியமனம்: ததகதா ராய் திடீர் மாற்றம் ஏன்?
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago