சோவியத் கம்யூனிச புரட்சியாளர் விளாதிமிர் லெனினுக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சிலை பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்க்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக புதைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையின் பிரம்மாண்டத் தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
லெனின் சிலை பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு எந்த வித மரியாதையும் இல்லாமல் உடைக்கப்பட்டு பெர்லின் புறநகர் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்டது.
ஜெர்மன் பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘குட் பை லெனின்’ இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே. கிழக்கு ஜெர்மனிக்கும் கம்யூனிஸத்துக்கும் முடிவு கட்டுவதை அறிவிக்கும் குறியீடாக லெனின் சிலை தகர்க்கப்பட்டது.
கிரானைட்டில் செய்யப்பட்ட இந்த சிலையை ரஷ்ய சிற்பி நிகோலய் டாம்ஸ்கி வடிவமைத்தார். இது புதைக்கப்படுவதற்கு முன்பாக 130 துண்டுகளாக உடைக்கப்பட்டது.
லெனின் சதுக்கம் என்பது ஐக்கிய நாடுகள் சதுக்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
இப்போது கண்காட்சிக்காக லெனின் சிலையின் தலையை தோண்டி எடுத்தது பற்றி, கிழக்கு ஜெர்மன் வாசியான பிரெடெரிக் க்ராஸ் என்பவர் கூறும்போது, “மீண்டும் அவரை தோண்டி எடுப்பது முட்டாள் தனம், அவர் என்ன மீண்டும் வந்து விடுவாரா? வரலாறு முடிந்து விட்டது” என்றார்.
ஆனால் இவரது கருத்தை மற்ற பெர்லின்வாசிகள் ஏற்கவில்லை. அவர்கள் பொதுவாக, "அவரது சிலையின் பகுதியை மீட்டெடுப்பது சரியான விஷயம், முதலில் அதனை உடைத்ததே வெட்கக் கேடானது” என்று கருத்தையே கொண்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago