ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டனை கடந்தும் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள புதிய பட்டன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் சிஇஓ ஸக்கர்பர்க் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது பேசிய ஸக்கர்பர்க், "ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டன் இருப்பது போல் 'டிஸ்லைக்' பட்டனும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வெகுகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில சோக நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் குறித்த பகிர்வுகள் மீது தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய விரும்பும்போது 'லைக்' செய்வது பொருத்தமாக இல்லை. எனவே, ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டனை கடந்தும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள புதிய பட்டன் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் தாக்கத்தை கண்டறிந்து பின்னர் நடைமுறையில் அமல்படுத்தப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago