சிந்தி மக்கள் மாயம், கடத்தல் எதிரொலி: பாகிஸ்தான் தூதர் வீட்டு முன்பு அமெரிக்காவில் போராட்டம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் சிந்தி இன மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவிலும் சிந்தி இனமக்கள் கணிசமாக உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் சிந்தி மக்கள் அடிக்கடி காணாமல் போகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரின் வீட்டுக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை, சிந்து இன மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிந்தி பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கூடி, பாகிஸ்தானுக்கு எதிராக குரல் எழுப்பினர். எதிர்ப்பு வாசகங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, பாகிஸ்தானில் காணாமல் போன சிந்தி மக்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவாக இருப்போம் என்று குரல் கொடுத்தனர். வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட சிந்தி மக்களுக்கு பாகிஸ்தானில் சுதந்திரம் வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். கராச்சியில் ஆசிரியர் மற்றும் சரங் ஜோயோ ஆகியோர் கடத்தப்பட்டனர்.

சிந்தி கவிஞரும் எழுத்தாளருமான தாஜ் ஜோயோ, பாகிஸ்தானின் அதிபர் விருதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் கடத்தப்பட்ட சரங் ஜோயோவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்