அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் ட்ரம்ப்(வயது71) உடல்நலக்குறைவால் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று காலமானார்.
நியூயார்க்கில் உள்ள சிட்டி ஹாஸ்பிடலில் மிகவும் மோசமான நிலையில் ராபர்ட் ட்ரம்ப் இருப்பதை அறிந்த அதிபர் ட்ரம்ப் அவரைச் சந்தித்தார். ஆனால், அடுத்த சிலமணிநேரங்களில் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழந்தார். ராபர்ட் ட்ரம்ப்புக்கு என்ன உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதுகுறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
ராபர்ட் ட்ரம்ப் மறைவு குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “ நான் என்னுடைய கனத்த இதயங்களுடன் என் சகோதரரின் நினைவுகளைப் பகிர்கிறேன். ராபர்ட் ட்ரம்ப் என்னுடைய சகோதரர் மட்டுமல்ல, எனக்குச் சிறந்த நண்பர். நான் அவரை இழந்து வாடுகிறேன், ஆனாலும், மீண்டும் அவரைச் சந்திப்பேன். என்னுடைய மனதில் என் சகோதரரின் நினைவுகள் எப்போதும் இருக்கும். ஐ லவ் யூ. ரெஸ்ட் இன் பீஸ்” எனத் தெரிவித்துள்ளார்.
71வயதாகும் அதிபர் ட்ரம்ப் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட நூலை வெளியிடக்கூடாது என்று அதிபர் ட்ரம்ப் சார்பில் கடந்த ஜூன் மாதத்தி்ல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் ராபர்ட் ட்ரம்ப் தான். ஆனால், அடுத்த இந்தவழக்கு தொடர்ந்த சில நாட்களில் உடல்நலக்குறைவால் ராபர்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அதன்பின் கடந்த 2 மாதங்களாக தீவிரமான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபர்ட் ட்ரம்ப் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.
ராபர்ட், டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சகோதரர்கள் மற்றும் ஒன்றாக தொழில் செய்த கூட்டாளிகள் ஆவர். அதிபர் ட்ரம்பின் பல்ேவறு தொழில்களை மேற்பார்வை செய்து வந்தவர் ராபர்ட் ட்ரம்ப்.
ஆர்ட் ஆஃப் தி டீல் எனும் புத்தகத்தை டொனால்ட் ட்ரம்ப் 1987-ம்ஆண்டு எழுதினார். அதில் தனது சகோதரர் குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில் “ என்னைப் போல் அல்லாமல் மிகவும் அமைதியாகவும், எளிதாக பழகக்கூடியவர் ராபர்ட். இளமைக் காலத்தில் வால்ஸ்டீர்ட் பகுதியில் ஒரு நிதிநிறுவனத்தில் பணியாற்றிய ராபர்ட் ட்ரம்ப் அதன்பின், அந்த பணியிலிருந்து விலகி, குடும்பத் தொழிலை நடத்தி வருகிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 1948ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர் ராபர்ட் ஸ்டீவர்ட் ட்ரம்ப். இவருடன் சகோதரர்கள் மொத்தம் 5 பேர். இதில் அதிபர் ட்ர்ம்பும் ஒருவர். மொத்தம் 5 சகோதரர்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ராபர்ட் ட்ரம்ப் அதன்பின் வால்ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு நிதிநிறுவனத்தில் பணியாற்றி, அதன்பின் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்தார்.
ராபர்ட் ட்ரம்ப்புக்கு குழந்தை இல்லை. முதல்மனைவியை விவாகரத்து செய்து அன் மேரி பலான் என்பவரை 2-வதாக ராபர்ட் திருமணம் செய்தார். இருப்பினும் தனது முதல்மனைவியின் மகன் பிளைன் ட்ரம்ப் கல்விக்கும் அவரை வளர்க்கவும் ராபர்ட் ட்ரம்ப் உதவி செய்து வந்தார்.
ராபர்ட் ட்ரம்ப்பின் மற்றொரு சகோதரர் பிரட் ட்ரம்ப் , கடந்த 1981-ம் ஆண்டு அவரின் 43-வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
50 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago